Saturday, September 13, 2025

எடப்பாடியை சந்தித்த ஹாரூன் ரஷீது தலைமையிலான மஜக நிர்வாகிகள்! லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மஜக தலைமை நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் ஹாரூன் ரஷீத், அதிமுக கூட்டணிக்கு மஜகவின் ஆதரவை தெரிவித்தார்.

அப்போது தலைவர் பஷீர் அஹமது, அவைத்தலைவர் சம்சுதீன் நாஸர் உமரி, துணைச் செயலாளர்கள் சைஃபுல்லாஹ், காயல் சாகுல் ஹமீது, அப்சர் சையது, தாரிக் முகமது உள்ளிட்ட தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img