தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 30/12/2024 திங்கட்கிழமை(நாளை மறுநாள்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் 11 கேவி அதிராம்பட்டினம், 11 கேவி கருங்குளம், 11 கேவி மேலத்தெரு, 11 கேவி ராஜாமடம், 11 கேவி புதுக்கோட்டை உள்ளூர் (ஏரிப்புரக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர், மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு) ஆகிய மின்பாதைகளில் நாளை மறுநாள் 30-12-2024 திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.