Tuesday, December 2, 2025

காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கவலையில்லை ~ துரைமுருகன்…!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டிஆர் பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். எனது அறிக்கைக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்கள் ஒதுக்கப்படவில்லை. காலம் எப்போதும் நல்ல பதிலைத்தான் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
spot_imgspot_imgspot_imgspot_img