Monday, December 1, 2025

இஸ்லாமியர்கள் மீதான அவதூறு.. அமீரகத்தில் அடுத்தடுத்து வேலையிழக்கும் இந்தியர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த ராவத் ரோஹித், மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்த ஒருவர் என இரண்டு பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், இத்தாலிய உணவகத்தில் பணியாற்றி வந்த ரோஹித் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல ஷார்ஜாவில் நுமிக்ஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றும் இந்தியரும் இதே குற்றச்சாட்டால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை அவருக்கு ஊதியம் வழங்கப்படாது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியர்கள் யாரும் இஸ்லாம் குறித்து அவதூறான கருத்துகளை, சர்ச்சைக்குரிய வாசகங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கடந்த ஒரு மாதமாக இந்தியத் தூதரகம் எச்சரித்து வரும் சூழலில், தற்போது இந்தப் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே, கடந்த வாரம் விஷால் தாகூர் என்ற பொய்யான பெயரில் சமூக வலைத்தளத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிய இந்தியரைத் துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்கார்ட் குழுமம் வேலையிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img