Monday, December 1, 2025

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மமக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை கடந்த இரு தினங்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதனடிப்படையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சிகளின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இரு கட்சித்தலைவர்களும் கையெழுதிட்டனர். மேலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்றும், மமக எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
spot_imgspot_imgspot_imgspot_img