Friday, March 20, 2026

அதிரையில் தோன்றிய திடீர் வெளிச்சம்! இது தான் காரணம்!! துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றியது. சிறிது நேரம் நீடித்த அந்த வெளிச்சத்தால் அது என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். மேலும் அதனை தொடர்ந்து அதிரையில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவியது. இதனையடுத்து தகவலறிந்த மின் வாரிய பணியாளர்கள், வெளிச்சம் வந்த திசையை நோக்கி பயணித்து சுரைக்காய்க்கொல்லையில் எச்.டி லைன் துண்டானதை கண்டறிந்தனர். பின்னர் சில மணிதுளிகளில் அந்த பழுதை நீக்கி மீண்டும் சீரான மின் இணைப்பை வழங்கினர். இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு சீரான மின் சாரம் கிடைக்க செய்த மின்வாரிய ஊழியர்கள் சேகர், சேக் தாவூத் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img