Friday, March 20, 2026

துபாயில் தீட்டிய திட்டம் – 5 கூட்டாளிகளுடன் கடலூரில் சிக்கிய பட்டுக்கோட்டை வாலிபர்.

spot_imgspot_imgspot_imgspot_img

இவர்கள் அனைவரும் பெண்ணாடம் வடக்கு வெள்ளாளர் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையடிப்பதற்காக இங்கு வந்து முகாமிட்டுள்ளது தெரிய வந்தது. எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த அரிவாள், உருட்டுக்கட்டை, முகமூடி, கையுறை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவர் மீதும் கரூர், திருப்பூர், பல்லடம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

இந்த கும்பல் தங்குவதற்கு தனது கொட்டகையில் இடம் கொடுத்த பாலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பலுக்குத் தலைமை வகித்த செந்தில்குமாரும் இவர்கள் தங்கியிருந்த கொட்டகைக்குச் சொந்தக்காரரான பாலுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அந்த நட்பின் அடிப்படையில் பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காகத் திட்டம் போட்டு குழுவாக இங்கு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தற்செயலாக இந்த கும்பல் குறித்து அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த ரகசிய தகவலால் மிகப்பெரிய கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img