Monday, May 20, 2024

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்.. X தளத்தில் கண்டனம் தெருவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் தமிழக அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சி தலைவருமான எடப்பாடி k. பழனிசாமி தனது X- தளத்தில் தமிழக முதல்வர் M.K.ஸ்டாலின் அவர்களை கண்டித்து கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியதாவது…

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசுலாமிய சிறுபான்மையினர் அறக்கட்டளை (அப்போதைய) பேரூராட்சி நிலத்தை குத்தகைக்குப் பெற்று ‘இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி’ நடத்தி வந்த நிலையில், அந்நிலத்தை மேற்படி சிறுபான்மையினர் அறக்கட்டளைக்கு மாற்றுவது தொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் இருக்கின்ற போதும் ,

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் SLP தாக்கல் செய்யப்பட்டு Diary எண் வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் நிலையிலும் , 2.1.2024 அன்று அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பள்ளியை காலி செய்து 7 நாட்களுக்குள் நிலத்தை ஒப்படைக்க நோட்டிஸ் வழங்கியுள்ளார்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மார்ச் மாதம் +2 மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அரசு தேர்வுகளுக்காக முழு மும்முரமாக பணியாற்றி வரும் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீட்டிற்கு தாக்கல் செய்யப்பட்டு, Diary எண் வழங்கப்பட்ட நிலையிலும், சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் விடியா திமுகவின் உள்ளூர் நிர்வாகியின் தலையீட்டில், நகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு,

பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, நீதிமன்ற அமீனா இல்லாமல் , எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், 11/1/2024 காலை 6 மணிக்கு காவல்துறையின் உதவியுடன், புல்டோசர் வைத்து திமுகவினரின் தூண்டுதலால் பள்ளியின் மேற்கூரையை இடித்து பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர்.

இதை செய்த நகராட்சி நிர்வாகத்திற்கும், விடியா திமுக அரசின் முதல்வர்
திரு. @mkstalin -க்கும் எனது
கடும் கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெருவித்துள்ளார்.

.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...