Saturday, September 13, 2025

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம் இதோ :

திமுக – 21

காங்கிரஸ் – 9 + புதுச்சேரி

விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)

சிபிஐ – 2

சிபிஎம் – 2

மதிமுக -1

இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)

கொமதேக – 1 (நாமக்கல்)

திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் :

திமுக – 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி)

காங்கிரஸ் – 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை)

விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)

சிபிஐ – 2 (நாகை மற்றும் திருப்பூர்)

சிபிஎம் – 2 ( மதுரை, திண்டுக்கல்)

மதிமுக -1 (திருச்சி)

இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)

கொமதேக – 1 (நாமக்கல்)

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img