Sunday, May 19, 2024

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை 2011ம் ஆண்டு நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான நேரடி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் S.H.அஸ்லம் மாற்றினார். பின்னர் அதிரை நகர திமுகவில் உழைக்கும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

இதனை பொருத்துக்கொள்ள முடியாத சிலர், S.H.அஸ்லத்தை அதிரை அரசியலை விட்டு ஒதுக்க உள்ளடிவேலைகளை பார்த்தனர். ஆனால் தலைமையின் குட்புக்கில் இருந்ததால் தொடர்ச்சியாக அவருக்கு சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர், மாவட்ட பொருளாளர் என்கிற உயர் பொறுப்புகள் கிடைத்தன.

2022ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் அஸ்லத்திற்கு சேர்மன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அது அவருக்கு கிடைக்கவில்லை. இருந்த போதிலும் தலைமையின் அறிவிப்புக்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டார்.

இதனிடையே உள்ளூரில் ஒருசிலர் அக்கட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் சொத்துக்களை பகிரங்கமாக அபரிக்க முயற்சித்தது, சிறுபான்மை கல்வி கூடத்தை புல்டோசர் கொண்டு இடித்தது, விவசாய நிலங்கள் வைத்திருக்கும் சிறுபான்மை மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பறிப்பது போன்ற அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகார்கள் தலைமைக்கு பரந்த சூழலில் உளவுத் துறையும் அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து ரிபோர்ட் கொடுத்தது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் நிர்வாக வசதிக்காக அதிரை நகர திமுகவை கிழக்கு மேற்கு என்று இரண்டாக பிரித்த அக்கட்சி தலைமை, 14 வார்டுகளை உள்ளடக்கிய மேற்கு நகரத்திற்கு S.H.அஸ்லத்தை பொறுப்பாளராக நியமித்தது. தலைமையின் இந்த முடிவுக்கு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்ததுடன் நிம்மதி பெருமூச்சும் விட்டனர்.

இதனையடுத்து மேற்கு நகர திமுகவில் நூற்றுக் கணக்கானோர் புதிதாக இணைந்தும் வருகின்றனர். குறிப்பாக அதிகளவில் இளைஞர்கள் இணைவது அக்கட்சியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான அபூபக்கர், அதிரை மக்களுக்கு புதியதோர் நம்பிக்கை கிடைத்திருப்பதாகவும், அதனாலேயே இளைஞர்கள் சாரசாரையாக திமுகவில் இணைந்து வருவதாக கூறினார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....