Wednesday, March 18, 2026

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்து முடிந்த தேர்தலில் அனல்பறந்தது.

இந்நிலையில், இன்று திமுக அரசு 4ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை MLA சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்ட அதிரை மேற்கு நகரம் சார்பில் செய்யப்பட்ட தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் கா.அண்ணாதுரை எடுத்துக்கூறினார். இதனையடுத்து இனி வரும் காலத்திலும் கட்சி பணியை சிறப்பாக செய்ய அதிரை மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img