Friday, May 3, 2024

இந்திய சிறைவாசிகளைப் பற்றி சுஷ்மாவிற்கு யாசீன் மாலிக் எழுதிய கடிதம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக், காஷ்மீரி சிறைக்கைதிகளின் மோசமான நிலைமைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

டிசம்பர் 25-ம் தேதியன்று மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் குல்பூஷன் ஜாதவ் பற்றி ‘உணர்ச்சிபொங்க’ பேசியதைக் குறிப்பிட்ட யாசின் மாலிக், “உங்கள் உரையில் அன்று குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினர் அவரை பாகிஸ்தான் சிறையில் சென்று சந்தித்ததில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினீர்கள். உங்கள் பேச்சு என் இதயத்தைத் தொட்டது. ஜாதவ்வின் உரிமைக்காகவும் நான் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் குறிப்பிட்டு இங்கு திஹார் சிறையில் தன் தாய் தன்னை தழுவிக்கொள்ள மறுக்கப்பட்ட சம்பவத்தையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் யாசின் மாலிக்.

“ஜோத்பூர் சிறையில் கண்ணாடி தடுப்புக்குள் என்னைப் பார்ப்பதை கதறும் என் சகோதரியும் விரும்பவில்லை. உள்தொலைபேசியில்தான் ஜாதவ் போல் பேச முடிந்தது” என்று தன் கடிதத்தில் கைதிகளின் உரிமைக்கு குரல் கொடுத்த யாசின் மாலிக், பாகிஸ்தான் அதிகாரிகளை நோக்கி, “சிறைக்கைதிகள் உரிமைகள் குறித்து குரானையும் நபிகள் நாயகம் கூறியதையும் கடைபிடியுங்கள், கைதிகளின் குடும்ப நலன்களையும், நியாயமான விசாரணையையும் மேற்கொள்ளுங்கள்” என்றார்.

அதே போல், இங்குள்ள கைதிகளிடத்திலும் இதே கொள்கைகளைக் கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தினார். “சிறையிலடைக்கப்பட்ட காஷ்மீரிகளின் மனைவிகளும் குழந்தைகளும் இழிவு படுத்தப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக ஷபீர் ஷா, அயாஸ் அக்பர், அல்டாஃப் ஷா, ஷாகித் உல் இஸ்லாம், பீர் சபியுல்லா மற்றும் சிலரது குடும்பத்தினர்களும் இதே இழிவை அனுபவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார் யாசின் மாலிக்.

“நான் இந்தக் கடிதத்தை அரசியல்வாதியாக எழுதவில்லை, சிறை வாழ்க்கையின் துன்பங்களை, இழிவுகளை அனுபவித்த கண்கூடான சாட்சியாகவே எழுதுகிறேன். இந்த ஏமாற்றத்திலிருந்து ஒரு பக்கத்தை நாம் பாடமாக எடுத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கை இன்னும் கூட கொஞ்சம் நாகரிகமாக இருக்கலாம் என்பதற்காக எழுதுகிறேன். சிறைக்கைதிகள், சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் வாழ்வு இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக அமையலாம் என்று நாம் உறுதி மொழி பூணுவோம், என்று யாசின் மாலிக் கவிஞர் இக்பாலின் கவிதை
ஒன்றுடன் கடிதத்தை முடித்துள்ளார்.

தி இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...