Home » சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார்..!!

சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார்..!!

0 comment

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அதிகமான குப்பைகள் தெருக்களில் இரைந்துகிடந்து வந்தன.

மழைக்காலங்களில் பிளாஸ்டிக்கழிவுகளில் மழைநீர்தேங்கி கொசுக்கள் பெருகி டெங்குகாய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவி அதிரை வாழ்மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாயினர்.

பேரூராட்சியின் தூய்மைப்பணிக்கு உதவிசெய்யும் வகையிலும், தூய்மையான அதிரையை உருவாக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தோடு அதிரையில் உள்ள தன்னார்வதொண்டு அமைப்புகள் அதிரைபேரூராட்சி பகுதிகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கொடையாளர்களிடம் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நன்கொடை பெற்று இரும்புகம்பி வலையால் ஆன குப்பைக்கூண்டுகளை வைத்துபராமரித்துவருகின்றனர். தினந்தோறும் காலையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் அதிரை பேரூராட்சி முழுதும் குப்பைக்கூண்டுகள் மற்றும் குப்பைகளை பார்வையிட்டு வாட்ஸ் ஆப் மூலம் பேரூராட்சிக்கு தகவல் அளித்து வருகின்றனர்.பேரூராட்சி சார்பிலும் தூய்மைப்பணி செய்து வருகின்றனர்.இதனால் தெருக்களில் குப்பைகள் இரைந்துகிடப்பது குறைந்து வருகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் காட்டுக்குளம் அருகில் ஷம்சுல் இஸ்லாம்சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் வைக்கப்பட்டிருந்த 70கிலோ எடையுள்ள இரும்புக்கம்பிவலைக்கூண்டினை நேற்று 26.01.2018 முதல் காணவில்லை.மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம்சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் முடிவின்படி இன்றுகாலை 11.00மணியளவில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிராம்பட்டினம் காவல்நிலையம் சென்று புகார் அளித்துவந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter