அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரி வளாகம் முன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.
MKN டிரஸ்ட்டிற்கு சொந்தமான காதிர் முகைதீன் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு பல லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் அதிரை ஹாஜா அவர்கள் கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.