தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் இன்று(06/04/2018)முற்பகல் மன்னார்குடி பகுதியில் இருந்து பட்டுகோட்டை செல்லும் தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது.
மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.
இது போன்ற விபத்தை உருவாக்கிய தனியார் பேருந்து நிற்காமல் விரைந்து சென்றுவிட்டது.
இந்த பகுதியில் பல முறை விபத்து தொடர்ந்து ஏற்படுவதனாள் அந்த பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.