Sunday, February 1, 2026

அதிரையில் நடைபெற்ற கலாம் நண்பர்கள் இயக்கம் போராட்டம்…!! அதிரை எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், மீத்தேன் திட்டத்தை தடை செய்ய கோரியும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இளைஞர்களாக ஒன்றிணைந்து
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கலாம் நண்பர்கள் இயக்கம் அதிரை ஒன்றியம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லலைட் ஆலையை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே சுமார் 5மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் அதிரை ஒன்றிய செயலாளர் அலெஸ்ஜாண்டெர் அவர்கள் வரவேற்புரை வழங்க, தஞ்சை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்தஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துறையை பட்டுகோட்டை கலாம் இயக்க பொருளாளர் மதுசூதனன் வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுகோட்டை மற்றும் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவுசெய்தனர்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img