தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு பகுதியில் MLA சி.வி.சேகர் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களை சந்தித்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பனி மன்றத்தினர் , கடற்கரைத் தெருவில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளையும் , தேவைகளையும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என MLA சி.வி.சேகர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கோரிக்கையை ஏற்ற MLA. சி.வி.சேகர் அவர்கள் இன்று (14/04/18) சனிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடற்கரைத் தெருவை ஆய்வு செய்த பின் MLA சி.வி.சேகர் அவர்கள் , கோரிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக செய்து தருவதாக உறுதியளித்தார்.