தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியை சேர்ந்தவர் சாஹுல், கொத்தனாரான இவர் பட்டுக்கோட்டை பகுதிகளில் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று(20.04.2018) வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது அதிரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான லாரல் பள்ளி அருகே இவரது வாகனம் வந்துகொண்டு இருக்கையில் அப்பகுதில் சுமார் ஐந்து இளைஞர்கள் மது போதையில் சாகுலின் வாகனத்தை நிறுதியுள்ளனர்.
அவர் தனது வாகனத்தை நிறுத்தி இறங்குவதற்குள் அந்த ஐந்து இளைஞர்களில் ஒருவர் இவரின் இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்க, மற்றொருவர் இவரின் பையில் உள்ள பொருட்கள் மற்றும் பணத்தை பரித்துள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த சாஹுல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
ஆனால், அந்த ரவுடி கும்பல் இளைஞர்கள் கத்தியை சாஹுல் மீது வீசி உள்ளனர். இதில் சாகுலின் கால் பலத்த காயமடைந்தன
இரத்தம் சொட்டிய நிலையில் பட்டுகோட்டை காவல் நிலையத்திற்கு செல்ல முற்பட்ட அவரை அக்கும்பல் மிரட்டி ஊருக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு அதிரை காவல் நிலையத்திற்கு இரத்த காயங்களுடன் வருகை தந்தார்.
போலீசார் அவரை முதல் உதவி செய்துகொண்டு புகார் அளிக்கும் படி கூறியுள்ளனர்.
இது குறித்து அதிரை காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி பட்டுகோட்டை சாலையில் அதிரை காவல் துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ இணைப்பு:-