தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
தந்தையின் பாலியல் வன்கொடுமையால் அந்த சிறுமி கற்பமாகியுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று தஞ்சை மகளிர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும் வரை சிறைத் தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.