Home » ஷார்ஜாவில் மனைவியை கொலை செய்து விட்டு குழந்தைகளுடன் கேரளாவிற்கு தப்பியோட்டம்!!

ஷார்ஜாவில் மனைவியை கொலை செய்து விட்டு குழந்தைகளுடன் கேரளாவிற்கு தப்பியோட்டம்!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஐக்கிய அரபு அமீரகம்,ஷார்ஜாவில் உள்ள மைசோலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியப் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெக்கப்பட்டுள்ளது.

கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக வீடு பூட்டியே கிடந்துள்ளது.பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து  ஷார்ஜா பொதுப்பணித்துறை, காவல் அதிகாரிகள் ,மருத்துவர்கள் என சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டை திறந்து பார்க்கையில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சரியாக புதைக்கபடாமல் இருந்ததை கண்டெடுத்தனர்.உடனே உடலை கைப்பற்றி தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் தாக்கப்பட்டு இருப்பதாகவும்,கொலையை செய்து விட்டு அவருடைய கணவர் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கேரளாவிற்கு தப்பி சென்றுவிட்டார் என்று சிஐடி அதிகாரிகள் கூறினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter