145
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற ஆயுதங்களின் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் M.S.பிரதீப் , B. சிவநேசன் ஆகிய இருவரும் மரணம் அடைந்தனர்.
மேலும், M. சண்முகசுந்தரம் , D. ராஜேஷ் , D. வீரபாகு , M.S.விமலாதித்தான் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.