54
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலதெரு சாணாவயல் பகுதியில் TNTJவின் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்மா தொழுகை ஆகியவை நடைபெற்றது.
அதிரையில் இதற்க்கு முன்னர் TNTJவின் இரு கிளைகள் செயல்படும் நிலையில் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பிற்கு மக்கள் பெரும் வரவேற்பளித்தனர்.
இந்த மர்கஸ் திறப்பு விழா நிகழ்வில் ஜும்மா தொழுகையின் போது ஜும்மா உரையை TNTJன் பேச்சாளர் சபீர் மிஸ்க் அவர்கள் ஆற்றினார்.
இந்த நிகழ்வில் பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு TNTJன் அதிரை கிளை-3 நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.