Friday, March 20, 2026

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகின்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் அதன் இயக்குநர் வசுந்தராதேவி, காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியான சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படவுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img