Home » ரமளான் பேசுகிறேன் !!

ரமளான் பேசுகிறேன் !!

0 comment

 

உன்னை விட்டும்
விடைபெறப்போகிறேன்
என் தவணை முடிய
இன்னும் சில தினங்களே இருக்க
உன்னை விட்டும்
விடை பெறப்போகிறேன்…!

எல்லாரையும் போல
என்னை வரவேற்க
வீட்டை சுத்தம் செய்து வைத்தாய்
ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை
ஆண்டாண்டு காலமாய்
மண்டிக் கிடக்கும் கழிவுகளை
சுத்தம் செய்யவேயில்லை நீ…!

என் தெருக்கள் வழியே
ஷைத்தான் நுழையாது போனாலும்
ஏனைய நாட்களில் அவன் புழக்கம்
அதிகமிருந்ததால்
உன் இதயவறைகள் இப்போதும்
கறை படிந்தே கிடக்கிறது…!

கண்ணயமிக்க என் இரவுகளில்
கண்ணீர் சிந்தவில்லை…
தொலைக்காட்சிக்குள்ளேயே
தொலைந்துபோய் கிடந்தாய்…!
திக்ர் செய்யவேண்டிய உன் விரல்களோ
ரிமோர்ட் பட்டன்களைத் .தட்டியபடி..

உன் வீட்டில் ஆளுக்கொரு
மொபைல் உண்டு!
உன் ஆறாம் விரலாகவே
அது உண்டு..!
பாதி மட்டை கழன்ற அந்த
பழைய ஒன்றைத் தவிர
ஆளுக்கொரு குர்ஆன் உண்டா???

ஸஹருக்கு தயிர்
இஃப்த்தாருக்கு பலூடா என
வயிற்றுப் பள்ளத்தை நிறைக்க
பட்டியல் போடும் உனக்கு
ஆன்மாவின் வெற்றிடம் நிரப்ப
அது படைத்தவனிடம் நெருங்கவென
அமல்கள் எதனைப்
பட்டியல் போட்டிருக்கிறாய்???

உன் வாய் இன்னும்
அழுக்காகவே இருக்கிறது…!
பல்லிடுக்குகளில் சுத்தம்
செய்யும் போது
சமூசாவின் இறைச்சி வந்ததே
நேற்றிரவு நீ சாப்பிட்ட
உன் சகோதரனின் இறைச்சி
அப்படியே இருக்கிறது பார்…!

யார் ரமளானை அடைந்தும்
பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ
அவனுக்கு கேடு உண்டாகுக என்று
கருணை நபியே சபித்தார்களே …!
அந்தப் பாவிகளின் கூட்டத்தில்
நீயுமா அடங்கப் போகிறாய்?

ஓ..! இதுவெல்லாம் நான் அறியேனே?
எனக்கு பெற்றோரும்
சொல்லித்தரவில்லையே என்றவுன்
முணுமுணுப்பு கேட்கிறது..
எதையெல்லாமோ google இல் தேடும்
உனக்கு என்னைப் பற்றித்
தேட மட்டும் நேரமிருக்கவேயில்லை…!

உன் வாய் முத்திரையிடப்பட்டு

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter