18
அதிரையில் நேற்று(25.07.2018) இரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை பொழிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே மின்தடை செய்யப்பட்டது. சரியாக 11.20 மணியளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம் தற்போது வரை விநியோகிக்கப்படவில்லை.
ஏற்கனவே நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மின்தடை செய்யப்பட்டுள்ளதால் அதிரையர்கள் தூக்கத்தை துலைத்து வியர்வையில் தவித்து வருகின்றனர்.