55
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த அன்வர் ( 18 ), காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இவர் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதால், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (07/09/2018) வெள்ளிக்கிழமை மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் அன்வர் சிகிச்சைக்காக நிதி வசூலிக்கப்பட்டது.
எங்கள் வாசகர்களாகிய தாங்களும் முன்வந்து மருத்துவ செலவிற்கு உதவுமாறு வேண்டுகிறோம்!!
குறிப்பு: அதிரை எக்ஸ்பிரஸ் குழுவால் உறுதிசெய்யப்பட்ட தொடர்பு எண்
+91 9003409361