Thursday, February 5, 2026

புதுச்சேரி மெடிக்கல் கல்லூரியில் அதிரை மாணவருக்கு விருது!!

spot_imgspot_imgspot_imgspot_img

நேற்று முன்தினம் (17-09-2018) திங்கள்கிழமை புதுச்சேரியில் ஸ்ரீ மனக்குல விநாயகர் மெடிக்கல் கல்லூரியில் ஷயோனரா (Sayonara) எனும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் புகைப்பட கலைஞர், ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் போன்றவைகளில் திறமைகளை வெளிக் கொனர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்றனர். அதில் மிஸ்டர் ஃபேஷன் ஃப்ரீக் (Mr.Fashion Freak) எனும் போட்டியில் அதிரையை சேர்ந்த S.அஹமத் நவீத் முதலிடம் வென்று, விருது பெற்றுள்ளார்.

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் புரொஃபசர் ஆக பணியாற்றும் M.செய்யது அஹமது கபீர் அவர்களின் மகன் S.அஹமத் நவீத், ஸ்ரீ மனக்குல விநாயகர் மெடிக்கல் கல்லூரியில் MBBS இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் இது போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img