Sunday, March 22, 2026

அதிரை பேரூராட்சியின் வரி விதிப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது.

இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர் N.காளிதாஸ் தலைமை வகிக்க, துனை செயலாளர்கள் S.பன்னீர் செல்வம், M.L.A.ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன உரையை மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி MBA., BL., மாநில குழு உறுப்பினர் இரா.திருஞானம் உள்ளிட்ட 9 பேர் கண்டன உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து 4 அம்ச கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

  1. வீடு, குடிநீர், கடை போன்றவற்றிற்கு அதிரை போரூராட்சி வித்தித பன் மடங்கு வரியை திரும்ப பெற வேண்டும்.
  2. நிலத்தடி நீரை பாதுகாக்க அதிரையில் உள்ள ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு அதனை தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
  3. அதிரை – மகிழங்கோட்டை சாலை ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்றி மக்களுக்கு உறுதுனை செய்ய வேண்டும்.
  4. அதிரை ECR சேது ரோடு சந்திப்பில் ரவுண்டானா கட்டித் தருவதாக நெடுஞ்சாலைத்துறை அளித்த வாக்குறுதி இன்று வரையிலும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, எனவே அதனையும் விரைவாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img