Sunday, March 22, 2026

தடை விலகியதால் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!

spot_imgspot_imgspot_imgspot_img

இராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இதனையடுத்து இன்று இராமநாதபுரம் – கீழக்கரை
ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக காலை 11 மணியளவில் அடிக்கள் நாட்டப்பட்டது.

இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்னால் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், போரசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
வெட்டுத் தீர்மானம் வாயிலாகவும்,
சட்டமன்ற கேள்வி நேரத்திலும்
பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் ரயில்வே மேம்பாலம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தனியார் நிறுவனம் ஒன்று நீதிமன்றம் மூலம் தற்காலிக தடை ஆணை பெற்று
தற்போது அந்த தடை முற்றிலும் முடிவுக்கு வந்ததால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img