80
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து பைசாபாத் செல்லும் சர்தார் சேது எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் 5வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் பொதுப்பெட்டியில் ஏற முயன்று நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
ரயிலின் வேகத்திற்கு அவரும் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமன் விரைந்து செயல்பட்டு அவரைக் காப்பாற்றினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளைக் கண்ட ரயில் அதிகாரிகள் சுமனை வெகுவாகப் பாராட்டினர்..