அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான் இனி “பெட்ரோல்”..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது போன்ற அதிரடி அறிவிப்பை ஆந்திர அரசு எடுத்துள்ளது
இதற்கு முன்னதாக, ஹெல்மெட்- பெட்ரோல் சட்டம் சில மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு அமலில் இருக்கும் தருவாயில் , தற்போது ஆந்திராவில் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ஹெல்மெட்-பெட்ரோல் திட்டம் அமலில் உள்ள மாநிலத்தில்,பல விபத்துகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும், விபத்துக்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் இன்று முதல் ஆந்திராவில் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே வேளையில் ஹெல்மெட் இல்லாதவர்கள் சிலர் அதிர்ச்சியாகி உள்ளனர்
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





