Home » எச்சரிக்கை: பேரூந்தில் வாந்தி வந்ததால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் : துண்டானது தலை.!!

எச்சரிக்கை: பேரூந்தில் வாந்தி வந்ததால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் : துண்டானது தலை.!!

by
0 comment

மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண்.

அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது.இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்துள்ளது, விபத்தில் சிக்கிய பெண்ணின் பெயர் ஆஷா ராணி, வயது (56).

இவர் சத்னா மாவட்டத்திலிருந்து பன்னா மாவட்டத்துக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பன்னா நகரில் உள்ள டயமன்ட் கிராஸிங் பகுதியில் பஸ் வந்தபோது அப்பெண்ணுக்கு வாந்தி வருவது போல இருந்துள்ளது.

இதையடுத்து ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் அவரது தலை பலமாக மோதியது.

அப்போது பேரூந்து மிக அதி வேகமாக வந்து கொண்டிருந்ததால் மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் தலை நசுங்கி அப்படியே துண்டாகி விழுந்து விட்டது.

இந்த சம்பவத்தைப் பார்த்த பேரூந்து பயணிகளும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தை படு வேகமாக ஓட்டியதற்காக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

எச்சரிக்கை…

பேருந்தில் செல்லக்கூடிய பொதுமக்கள் வாந்தி போன்ற வருவதனால் தலையை ஜன்னலுக்கு வெளியே கொண்டு செல்லும் நிலை உருவாகியது, இதனால் விபத்து ஏற்படும் அதிக வாய்ப்புகள் உள்ளது ,உதாரணம் மேல கூறப்படும் செய்தி.ஆகையால் ஜன்னல் இரு புறம் பார்த்து தங்களுடைய சுய தேவையை நிறைவேற்ற வேண்டும். இதனால் விபத்துகளை தவிர்க்கலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter