அதிரை நகரில் அதிகரித்து வரும் டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றை அடுத்கு அதிகாரிகள் அவ்வப்போது அதிரையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த சில ஆண்டுக்ளாக செப்பனிடப்படாத தார்சாலை குண்டும் குழியுமாக அதிராம்பட்டினம் பகுதியில் உள்ளது என ஆய்வுக்கி வந்த அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வுக்கு பின் அதிரை நகரின் முக்கிய சாலைகள் பழுதாகி மழை நீர் தேங்கி நிற்பதைக்கண்ட மாவட்ட ஆட்சியர் பல்வேறு நல பணிகளுக்கு உடனடி ஆனை வழங்கினார்.
இதற்காகக் அரசு கருவூலத்தில் இருந்து சுமார்37 லட்ச ரூபாயை ஒதுக்கீடு முதற்கட்ட பணிகளை தொடங்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று தரகர்தெரு பெரிய தைக்கால் சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.