அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஹமீத் கான் கடந்த இரண்டாண்டுகளாக சிறப்புடன் பணியாற்றி வந்தார்,
SBIயின் விதி பிரகாரம் ஒருவர் கிளையில் இரண்டாண்டுகள் மட்டுமே நீடிக்க இயலும்.
அதன் பிரகாரம் ஹமீத்கான் சிறப்புடன் செயலாற்றி அதிரை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பணமதிபிழப்பு அறிவிப்புக்கு பின் ஏற்பட்ட இடர்பாடுகளை சிறப்பாக கையாண்டு அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் அதிரை கிளைக்கு புதிய மேலாளராக நாகர்கோவிலை சேர்ந்த பிரவின் என்பவர் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து நியமிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
இதனை அடுத்து இன்றுடன் பணிகளை நிறைவு செய்த ஹமீத்கான் இதுநாள் வரை ஒத்துழைப்பு நல்கிய அதிரை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றியும், சலாமும் தெரிவித்துள்ளார்.