வாழ்வின் அதிக நேரத்தை உங்கள்
பிள்ளைகளோடு செலவிடுங்கள்
எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய
நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .
நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்
என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்
உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்
பிள்ளைகளிடம் உணர்த்துங்கள்
உலக வரைபடத்தை வகுப்பெடுத்து
பிஞ்சு உள்ளங்களில் சர்வதேசியத்தை
விதையுங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதை
நிறுத்தி அறிஞர்களிடம்,வயதில்
மூத்தவர்களிடம் உரையாட வழிவகை
செய்யுங்கள்
நூலகங்களிலும் ஊர் சுற்றுவதிலும்
அதிக நேரம் செலவழிக்க தூண்டுங்கள்
மொழிப்பாடங்களை மட்டும் தகுதியான
ஆசிரியர்களிடம் தனியாக கற்க செய்யுங்கள்
………15 வயது வரை இப்படி உங்கள்
பிள்ளைகளோடு செலவழித்து உருவாக்கி
பாருங்கள்
உங்கள் பிள்ளைகள் மனித சமூகத்தின்
சொத்தாக மாறுவார்கள்
குறிப்பு :
இதை வாசித்த பிறகு எழும் கேள்விகளுக்கு
நீங்களே தீர்வையும் எழுதுங்கள்
CMN SALEEM