164
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. அப்துல்லா தலைமை தாங்கினார். புதுப்பட்டினம் கிளை தலைவர் MSD. முகம்மது சுல்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.