Home » டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

0 comment

மக்களவை தேர்தல் 2019ன் தேர்தல் களத்தில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பாமகவின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு கூட்டணி குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

கூட்டணிக்கு முன்னாள் அஇஅதிமுக மீது பாமக பல்வேறு ஊழல் குற்றசாற்றுகளை முன்வைத்தது, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமின்றி ஆளுநரிடம் புகார் அழித்திருந்ததும் அதன் பின்னர் தற்பொழுது 2019காண தேர்தல் கூட்டணி அறிவிப்பில் பாமக அஇஅதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்ததும் அனைவரும் அறிந்ததே..,

இந்நிலையில், பாமகவினால் தேர்தல் கூட்டணிக்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகிவந்த அஇஅதிமுகஉடன் கூட்டணி பாமக வைத்தது குறித்து பல்வேறு பத்திரிக்கையாளர்களுடன் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் சபீர் அகமது அவர்களும் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சபீர் அகமதின் மைக்கை ஆப் செய்யுங்கள் என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகும் சபீர் அகமத்தை மிரட்டும் வகையில் ட்விட்டர் பக்கத்திலும், சமூக வலைதளங்களிலும் பாமகவினர் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“சாதி, மத அடையாளங்களுக்குள் அடைக்க நினைப்பதும், அதை வைத்து மிரட்டுவதும் மிக தரம்குறைந்த போக்கு என்றும் இதனை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்று பத்திரிக்கையாளர்களை மிரட்டும் செயலில் பாமகவின் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. வித்தியாசமான அரசியல் மாற்றம் முன்னேற்றம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளில் இல்லாமல் போது வாழ்வில் பத்திரிக்கையாளரை மதிக்க வேண்டும், கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியிடம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.”

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter