கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பாக பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) நடத்திய தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்று (26/03/2019) பெரியக்கோட்டை அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நீரின் முக்கியத்துவத்தையும் நீரை எப்படி பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பது வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் CBD மதுக்கூர் நகர செயலாளர் இம்தியாஸ் அகமது சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.