Wednesday, March 4, 2026

அதிரை தமாகவினர் காங்கிரஸுக்கு துண்டு போட்டுள்ளனரா… காக்கையார் ?

spot_imgspot_imgspot_imgspot_img

க்கா…க்கா…. என்ன காக்கையாரே…அடிக்கடி அரசியல் செய்திய சொல்லி வந்த நீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆஸ்திரேலியா, அமேரிக்க எங்கேயும் புறபட்டுடியா?

இல்லங்க… கஜாவுக்கு அப்புறம் நான் பக்கதூருக்கு போயுட்டேன்…

அது சரி இப்போ என்னா செய்தியோட வந்து இருக்கீறிரு?….

என்னப்பா…எங்கிட்டு போனாலும் அரசியலேயே பேசி தொலையிறாங்க… நாங்க அது பன்னுவோம் நாங்க இது பன்னுவோம்ன்னு தேர்தல் அறிக்கையில புருடாவா உட்டு தள்ளுறானுங்க….

ம்ம்ம்….பொறந்த ஊராச்சே…ஒரு ரவுண்டு அடிக்கலாம்ன்னு நேத்து வந்தேன்… இருக்குற ஒன்னு ரெண்டு, தென்னை மரத்துல சில குருவிகளும் எங்க இனமும் தங்கி இருக்காங்க… ராத்திரி நேரம் ரொம்ப நேரம் பறக்க முடியாதுல அதான்… ஒரு கட்சியின் முக்கிய புள்ளி் வீட்டின் ஜன்னலோரம் கொஞ்சம் இளைப்பாரிவிட்டு காலைல பறந்திடலாம்ன்னும்…. கொஞ்சம் கண் அசந்தேன்…..

அப்போ அந்த புள்ளியின் செல்போன் கதறல்ல தூக்கமே இல்ல…. அதுல பேசின அந்த புள்ளி மறுமுனையில இருக்கிற ஆளுகிட்ட ….

1)அதிமுகவோட கூட்டனி வச்சுகிட்டாங்க… அதான்…ம்ம்ம்ம்

2) ?

1) அதோட நம்ம ஒரு பள்ளியின் முத்தவள்ளியா வேற இருக்கோம், அதிமுக கூட்டணிக்கு ஓட்டுகேட்டா நல்லா இருக்காதுல….

2) ?

1) ம்ம் ஆமா…ஆமா… அது வந்து நாங்க(குடும்பம்) இப்போ SS பழனி மாணிக்கத்துக்கு ஆதரவு கொடுத்து இருக்கோம்.

2) ?

1) இல்ல இல்ல….அவங்க நடவடிக்கை எடுத்தா எடுத்துட்டு போவட்டும்… அதுக்கு முன்னரே நாங்க இங்க உள்ள கள நிலவரத்த குறிச்சி தெளிவா லட்டர் போட்டாச்சு.

2) ?

1)ஆமா…. ஆமா அதுக்கு மேலயும் அவங்க நடவடிக்கை எடுத்தா எடுத்துட்டு போவட்டும்…. நாங்க வேற ஒரு பிளான்ல இருக்கோம்…

2) ?

1) அது சரி அது சரி….

2) ?

1) ஆமா… நாப்பது வருசம் இருந்திருக்கோம்… ஆமா ஆமா அதுக்குத்தான்… இதுல இருந்தா நம்ம செல்வாக்கு என்னாவுறது?
அதான் பழையப்படி அதுலயே சேந்து களமாடலாம்னு… முடிவு செஞ்சி களத்துல எறங்கியாச்சு… அதுக்கு மேல அல்லா இருக்கிறான்…

2) ?

1) இன்ஷா அல்லாஹ் … இன்ஷா அல்லாஹ்…

2) ?

1) வக்கட்டுமா….. (2) ? (1)ஆமீன் ஆமீன்…

இந்த உரையாடல் முடிறதுக்குள்ள…. மணல் மாஃபியா கும்பலின் மாட்டு வண்டி அணிவகுக்க … கட மொடா சத்ததுல ஒன்னும் வெலங்கல….ந்னு சொல்லிய படியே….பறந்துடுத்து…..

-காக்கையார்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img