ஏப் 1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், ஆதார் எண் செல்லாததாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி தேதியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இருப்பினும், 2019, ஏப்.1-ம் தேதிக்குப் (நேற்று முதல்) பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
வருமான வரி கணக்கை மின்னணு முறையிலோ அல்லது கையால் எழுதியோ தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதேசமயம், விதி விலக்கு அளிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிட அவசியமில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது…