Home » மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம்!

மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம்!

0 comment

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிர நடைபெற்றுவருகிறது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர் மோடி, கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக, மோடி, ஹெலிகாப்டரில் சம்பால்பூர் சென்று இறங்கியதும், அவரது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது.

ஒரு நபர் அமைப்பு விசாரணைக்குப் பிறகு, மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோஹசின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படவில்லை. சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்புள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதனை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒடிசாவில், அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டரிலும் சோதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter