48
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி MIET அணியினரும் AFC ஆலத்தூர் அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் MIET திருச்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் AFC ஆலத்தூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(26/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
உதயம் FC புதுக்கோட்டை – பாலு & கனகராஜ் மெமோரியல் திருச்சி