அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அதிரை பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தனர். டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் வழியாக பழஞ்செட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வெங்கடேசன், ரவிசங்கர், மேஸ்திரி, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்,பல பொது மக்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து அதிரை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.