43
சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தோஹாவுக்கு இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் நடுவானில் சென்ற போது அந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவை கண்டுபிடித்த விமானி அவசர அவசரமாக விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.
விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 240 பயணிகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.