92
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் கால்பந்து விளையாட்டை சிறுவயது முதலே ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் 19வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாட உள்ளார்.
இவரை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ் குமார் வெகுவாக பாராட்டினர்கள்.