Monday, March 23, 2026

அயோத்தி விவகாரம் : கீழக்கரை காவல் நிலையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img
அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தின் தீர்ப்பு இம்மாதம் இறுதிக்குள்  வர இருப்பதையொட்டி கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் கட்சி இயக்கங்கள் இந்து அமைப்புகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கீழக்கரை காவல் துறையால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் அதை  கொண்டாடவோ பட்டாசு வெடிக்கவோ ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டது.
மேலும் ,சமூக வலைத்தளங்களில் கவனமாக செயல்படவும் தீர்ப்பை உடனே விமர்சிக்கவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் அமைதியாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஊர் நலன் நாடி காவல்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அனைத்து  தரப்பினரும் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்  தங்களது சமூகத்திற்கும் இதை நாங்கள் கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள் : கீழக்கரை மீடியா
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img