அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர்.
புதிய வீடு கட்ட பேரூராட்சியின் ஒப்புதல் பெறுவது அவசியம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதிலும் கால தாமதம் ஏற்படுகின்றது. இதனால் விலைவாசி உயர்வாகி உரிமையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுகின்றன.
இதே போல் ஒப்புதல் வழங்கிய கட்டிடங்களுக்கு புதிய வரி அமல் படுத்தவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மேற்கண்ட பிரச்சனைகளைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.