உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடாதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றம், நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது ஆனால் இதுவரை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே, தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது மேலும் அவர்கள் மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது