அதிராம்பட்டினம் பிரிலியண்ட் பள்ளிகூடத்தில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் இருந்து அவ்வப்போது கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த முறை கல்வி சுற்றுலாவாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பள்ளிகூட நிர்வாகம் முடிவு செய்தது.
இதனை அடுத்து முறையாக மற்ற பள்ளி கூடங்களில் உள்ள மானவர்களோடு அமெரிக்க செல்ல அனுமதி பெற்றது பள்ளி நிர்வாகம்.
இதனை அடுத்து சுமார் 8 மாணவர்களை நாசா அழைத்துச்செல்ல திட்டமிட்டு ஆர்வமுள்ள அனைத்து மாணாக்கர்ர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் 8 மாணவர்கள் தேர்வாகினர்.
இதில் ஆலடி தெருவை சேர்ந்த நிஜாமுதீன் அவர்களின் மகன் நவாஸ் மற்றும் புதுமனைதெருவை சேர்ந்த ஆபிதீன் அவர்களின் மகன் தாரிக்கும் இக்குழுவில் இடம்பெற்று அமெரிக்க சென்றனர்.
அவர்களுக்கு விசா நடைமுறைகள் உள்ளிட்டைவைகளை முடித்து இன்று இரவு விமானம் மூலம் அமெரிக்கா சென்றனர.
அவர்களை வழியனுப்ப பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானவர்கள் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து வழியனுப்பினர்.