தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்குவை தடுக்க பல்வேறு அமைப்புகள் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பேரணி முதலியவைகளை நடத்தி வருகின்றன.
அதன் ஒருப்பகுதியாக இன்று காலை அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பள்ளியிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி ஈசிஆர் சாலை வழியாக அதிரை பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.